மதுரை கே.புதூர் அருகே மருதங்குளத்தில் ஓட்டுநர் யுவராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிலருக்கு அவர் மனைவி கவிதா பணம் கடனாகக் கொடுத்த நிலையில் கொடுத்தவர்கள் திரும்பத் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால், மனமுடைந்த மனைவி மாடி மீது ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்றச் சென்ற கணவர் பலி! - suicide
மதுரை: மனைவியை காப்பாற்றச் சென்ற இடத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது, மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும், அவரது மனைவியும் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் கணவர் யுவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி கவிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த யுவராஜுக்கு 15 வயதில் மகன் உள்ளார்.
மனைவியைக் காப்பாற்றச் சென்ற இடத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.