தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் முகப்பில் தொங்கிய மனித உடல் - பயணிகள் அதிர்ச்சி..! - pothigai express

Human body stuck in train engine: மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் முகப்பில் இறந்த நிலையில் சிக்கி இருந்த மனித உடலை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ரயில் என்ஜின் முன் சிக்கியிருந்த மனித உடல் - பயணிகள் அதிர்ச்சி..
ரயில் என்ஜின் முன் சிக்கியிருந்த மனித உடல் - பயணிகள் அதிர்ச்சி..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 10:53 AM IST

மதுரை: மதுரைக்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் முன் இறந்த நிலையில் மனித உடல் சிக்கி இருந்ததை கண்டு ரயில் ஏறுவதற்காக காத்திருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

செங்கோட்டை - சென்னை வரையில் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (அக். 15) மாலை வழக்கம் போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தபோது என்ஜினின் முன் பகுதியில் மனித உடல் சிக்கி இருப்பதை பயணிகள் கண்டு உள்ளனர். இந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: திருவிழா ராட்டினத்தில் இருந்து விழுந்து 2 சிறுவர்கள் பலி.. பஞ்சாப்பில் நிகழ்ந்த சோகம்!

இதனையடுத்து ரயில்வே போலீசார் என்ஜினின் முன் பகுதியில் சிக்கி இருந்த உடலை அப்புறப்படுத்தி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை கப்பலூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் ரயிலில் தற்கொலை செய்ய முயன்ற போது என்ஜினின் முன் பகுதியில் உடல் சிக்கி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவத்தால் பொதிகை ரயிலானது 45 நிமிடங்களுக்கு மேலாக மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இறந்தவரின் உடல் நீக்கப்பட்டதை அடுத்து ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் மதுரை ரயில் நிலையம் பகுதியில் சலசலப்பு நிலவியது.

இதையும் படிங்க: சொகுசு காரில் 4,000 மதுபாட்டில்கள் கடத்தல்.. 30 கி.மீ சேஸிங் செய்து மடக்கிய காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details