தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - ஆற்றின் நடுவே சிக்கிய குதிரைகள் - வைகை வெள்ளத்தில் சிக்கிய குதிரைகள்

வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதுரை வைகை ஆற்றின் நடுவே இரண்டு குதிரைகள் சிக்கிக்கொண்டன.

வைகையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - ஆற்றின் நடுவே சிக்கிய குதிரைகள்
வைகையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - ஆற்றின் நடுவே சிக்கிய குதிரைகள்

By

Published : Nov 13, 2022, 10:27 PM IST

மதுரை:தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி உபரி நீரானது வெளியேற்றப்படுகிறது. மதுரை மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (நவ.12) மாலை முதல் இரவு வரை பெய்த கனமழை காரணமாக மழை நீரானது வைகை ஆற்றிற்குள் வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை வைகை ஆற்றில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், மதுரை வைகை ஆற்றின் ஆரப்பாளையம் மேம்பாலத்தின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த 5 குதிரைகள் திடீரென தண்ணீரின் நடுவே சிக்கிகொண்டன. இதனையடுத்து பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குதிரைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - ஆற்றின் நடுவே சிக்கிய குதிரைகள்

தொடர்ந்து நீரின் வரத்து அதிகரித்து குதிரைகளை வெள்ள நீர் சூழ்ந்துவருவதால் அதனை மீட்க தீயணைப்புத்துறையினர் மீட்க கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்குப் பாடுபடுவேன்' - ரவிச்சந்திரன்

ABOUT THE AUTHOR

...view details