மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகச் செயல்படும் நாம் தமிழர் கட்சியை தடை செய்யவும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சாதி-மொழி பிரிவினையைத் தூண்டி இந்திய சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செயல்பட்டு வருவதாகவும், பிரதமரைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கும், தேசவிரோத இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு மதமாற்றம் செய்யும் கிறிஸ்துவ மிஷினரிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் பேசிவரும் திருமாவளவனின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இரண்டு மனுக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளன.