பொள்ளாச்சியில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசர், சதீஷ் உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றிட வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்தும் அழுத்தங்கள் வரத் தொடங்கியதையடுத்து, நேற்று இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு மாற்றி அரசாணை வெளியிட்டது.
பொள்ளாச்சி விவகாரம்: இணையத்திலிருந்து வீடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - பொள்ளாச்சி வீடியோ
மதுரை: பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் ஆபாச வீடியோவை இணையதளத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி விவகாரம்
இதனிடையே பொள்ளாச்சி சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையில் மாணவியின் பெயரைச் சேர்த்து வெளியிட்டதாக தகவல் வெளியானது.இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைத்து சிபிஐக்கு மாற்றும் அரசாணையை புதிதாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட உத்தரவுகள் பின்வருமாறு,
- பொள்ளாச்சியில் பெண்களின் ஆபாச வீடியோவை இணையதளத்தில் இருந்து முற்றிலுமாக மத்திய அரசு நீக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைத்து சிபிஐக்கு மாற்றும் அரசாணையை புதிதாக வெளியிட வேண்டும்.
- பொள்ளாச்சி பெண்களின் வீடியோவை வைத்திருப்பது, பகிர்வது தண்டனைக்குரிய குற்றம் என விளம்பரப்படுத்த வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்ட காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்