ஆதிகேசவ பக்தர்கள் சேவை அறக்கட்டளை செயலர் தங்கப்பன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கேரள மாநிலத்திliருந்து தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைக்கப்பட்டபோது, கேரள தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் இருந்த 490 கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தன. பழமையான இந்த கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்த கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் தொடர்பான ஆவணங்கள், திருக்கோயில் பதிவேட்டில் மலையாள மொழியில் அச்சிடப்பட்டு பழைய செட்டில்மென்ட் பதிவாகவே இதுவரை உள்ளது. மலையாள மொழியில் உள்ள ஆவணங்களின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. தற்போது, கோயில்களின் நிலங்களின் உரிமம் தனிநபர் பெயருக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையும் அறியவில்லை.