தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேர்மன் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கக் கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் மனு அளிக்க உத்தரவு - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

பரவை பேரூராட்சி சேர்மன் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

case seeking paravai mayoral reservation for tribals  mayoral reservation for tribals  high court madurai branch  election commission  high court madurai branch directed the election commission  case seeking paravai mayoral reservation  சேர்மன் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கக் கோரி வழக்கு  பரவை சேர்மன் பதவி வழக்கு  தேர்தல் ஆணையம்  தமிழ்நாடு தேர்தல் ஆணையம்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
சேர்மன் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கக் கோரி வழக்கு

By

Published : Feb 2, 2022, 8:47 AM IST

மதுரை: பரவை பேரூராட்சி சேர்மன் பதவி குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த வீரபுத்திரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.

அதில், “மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி 15 வார்டுகளைக் கொண்டது. இதில் பழைய வார்டு எண் 15, புதிய வார்டு எண் 4, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பரவை பேரூராட்சி, 1996ஆம் ஆண்டுமுதல் நான்கு தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இந்த நான்கு தேர்தல்களின்போது பரவை பேரூராட்சி சேர்மன் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு பொதுப்பணித் துறை மற்றும் நீர் வழங்கல் வெளியிட்ட அரசாணையின்படி பரவை பேரூராட்சி சேர்மன் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 2016ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்படவில்லை.

17 ஜனவரி 2022 அன்று பொதுப்பணித் துறை மற்றும் நீர் வழங்கல் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, மீண்டும் பரவை பேரூராட்சி சேர்மன் பதவி, பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே 2022ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, பொதுப்பணித் துறை மற்றும் நீர் வழங்கல் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கு, இடைக்காலத் தடைவிதித்து, இந்த அரசாணையை ரத்துசெய்து 2016ஆம் ஆண்டு அரசாணையின்படி, பரவை பேரூராட்சி சேர்மன் பதவியை பழங்குடியினருக்கு வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று (பிப்ரவரி 1) நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details