தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர்; பிடிவாரண்ட் பிறப்பித்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை! - etv bharat tamil

அரசு பள்ளி பாதுகாவலர் சிவலிங்கம் தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையாவிற்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு பிடிவாரண்ட்
ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு பிடிவாரண்ட்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 6:33 PM IST

மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றினார். தனது பணிகாலத்தை, பணி வரன்முறை செய்து பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க உத்தரவிட கோரி கடந்த 2016ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரனை செய்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, பாதுகாவலர் சிவலிங்கம் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, "கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. ஆனால் இது வரை பதிலறிக்கை தாக்கல் செய்ய வில்லை. எனவே இந்த வழக்கில் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கின் விசாரனையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி முன் விசரனைக்கு வந்தது. அப்போது ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் தரப்பில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்யபட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாத ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

இந்த பிடிவாரண்ட் உத்தரவை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் முறையாக செயல்படுத்தவேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரனை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: வந்தது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. தேனி பெண்கள் குஷி; அதிகாரிகள் குழப்பம்!

ABOUT THE AUTHOR

...view details