திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வெங்கிடுசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தமிழ்நாடு ஊரக பகுதிகளில் பெட்ரோல் பங்குகளை தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்கள் 2018 நவம்பர் 25ல் வெளியிட்டன. இதனால், ஏற்கனவே பெட்ரோல் நிலையங்கள் வைத்திருப்போர் பாதிக்கப்படுவர்.
பெட்ரோலுக்கான மாற்று எரிபொருள் கொள்கையை மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருப்பது முரணாக உள்ளது. ஆகவே, புதிதாக 5125 பெட்ரோல் பங்குகள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்தும், பெட்ரோல் பங்குகள் அமைப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிந்தார்.