மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு மருத்துவமனையில் கரோனா மருத்துவ பிரிவை தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் வினய் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர், திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
'மதுரையில் கரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது' - சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் - Madurai district News
மதுரை: அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தி கரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மருத்துவர்களிடையே பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க கிராமம் தோறும், வீதி வீதியாக காய்ச்சல் முகாம்கள் நடத்தி 20 விழுக்காடு இருந்த கரோனா பாதிப்பை 2.5 விழுக்காடாக குறைத்து மதுரையில் புதிய பார்முலாவை உருவாக்கியுள்ளோம் என்றார்.
இதையடுத்து, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "மதுரை மாவட்டத்தில் அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தி கரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது. அதிக படுக்கைகளுடன் கூடிய மருத்துவ பிரிவுகள் தயார் நிலையில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக, திருமங்கலம் போன்ற ஊரக பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைக்கு தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.