திருச்சி ரயில்வே காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்த வினோத் என்பவர், 2014 டிசம்பரில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில், கோடை ரோடு முதல் திருச்சி வரை பெண் காவலர் ஒருவருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த வினோத், அங்கிருந்த பெண் பயணி ஒருவரிடம் முறையற்ற வகையில் பேசியதால், சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அவர் மீது புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் 2015ஆம் ஆண்டு வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி வினோத் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பெண் பயணியிடம் தவறாக நடந்த காவலர்; சிசிடிவி பொருத்த ரயில்வேக்கு பரிந்துரை! - cctv cameras
மதுரை: பெண்கள், முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ரயில் பெட்டிகளில் (தனியறைகளில்) சிசிடிவிகளைப் பொருத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்வதற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், காவலர் வினோத் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யபட்டதால், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து, "பெண்களின் மீதான பாலியல் தொந்தரவு பெருகி வரும் சூழ்நிலையில், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர், இனி ரயில்களில் பயணிக்கும் பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ரயில் கம்பார்ட்மெண்டில் சிசிடிவிகளைப் பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.