சென்னை: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த கார்த்திக், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தனக்கு ஜாமீன் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை ஆகியவை விற்பனை செய்ததாகக் கூறி என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.