மதுரை:நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறையின் (அப்போதைய 2019 ஆண்டு) செயலாளர் பிரதீப் யாதவ் IAS, இரண்டு வார சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது. மேலும் இரண்டு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி வரும் 9 ஆம் தேதி உயர்நீதிமன்ற பதிவாளர் இடம் ஆஜராகவும்,
அபராதமாக ரூபாய் 1000 விதித்தும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் கல்வித்துறை சார்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கடந்த 2019 ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஞானபிரகாசம், கடந்த 2020 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இது சம்பந்தமாக அப்போதைய கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் (தற்போது இவர் நெடுஞ்சாலைத்துறை உயர் செயலாளராக உள்ளார்) மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஐஏஎஸ். அதிகாரி பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்களிடம், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, 'நீதிமன்றம் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பல வாய்ப்பு கொடுத்தும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.