தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருமொழிக் கொள்கை விவகாரம் -கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: இருமொழிக் கொள்கை மாநில அரசின் கொள்கையாக எடுத்துக்கொண்டால், அந்த இரு மொழி தமிழும் வேறு எதாவது ஒரு மொழியா அல்லது தமிழும் ஆங்கிலம் மட்டும் தானா என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

HC language Policy
HC language Policy

By

Published : Aug 8, 2020, 4:59 AM IST

தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும், உதவி பெறாத தனியார் பள்ளி உபரி ஆசிரியர்களை காலியிடங்களுக்கு இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன், சுரேஷ்குமார் அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,"அரசு உதவி பெறும், உதவி பெறாத, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் கல்வி, நிர்வாக விஷயங்கள் மட்டும் இல்லாமல் பணியாளர்கள் பிரச்சினையை சரி செய்ய தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சட்டம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973, விதிகள் தவிர வேறு எந்த ஒருங்கிணைந்த சட்டமும் இல்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது அரசு உத்தரவுகள், நிர்வாக உத்தரவுகள் மட்டுமே பிறப்பிக்கப்படுகின்றன.

சில நேரங்களில் பிரச்சினைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.இந்த வழக்கு விசாரணையின் போது, மற்றொரு முக்கியமான விஷயம் தெரியவந்தது.

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையை தொடர்ந்து இருமொழிக் கொள்கை மாநில அரசின் கொள்கையாக எடுத்துக்கொண்டால், அந்த இரு மொழி தமிழும் வேறு எதாவது ஒரு மொழியா? தமிழும் ஆங்கிலம் மட்டும் தானா?

தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்பிக்கும் மொழியாக மாறிய பள்ளிகள், தமிழ், ஆங்கிலம் இரு மொழியையும் சரிசமமாக கற்பிக்கும் மொழியாக கொண்ட பள்ளிகள், வேறு மொழி விகிதாச்சாரத்தில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு அரசு மானியம் கொடுப்பதில் மாற்றுக்கருத்து ஏற்படுமா என்பது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனக்கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details