திருச்சியைச் சேர்ந்த சந்திரசேகர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"திருச்சி புத்தூர் பகுதியில் மீன் மார்க்கெட் இயங்கிவருகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களே மீன் சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
மீன் வியாபாரிகளுக்கு ஆதரவான மனு - தள்ளுபடி செய்த நீதிமன்றம் - மீன் சந்தை
மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி, புத்தூர் வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டரை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை, தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புத்தூர் பகுதியில் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உறையூர் பகுதியில் கட்டப்படும் கட்டத்திற்கு மீன் சந்தையை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. ஆனால் உறையூர் பகுதியில் கட்டட பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. அதேசமயம் திருச்சி புத்தூரில் வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டெண்டர் விடப்பட்டதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை. டெண்டர் விதிப்படி, டெண்டர் விடப்பட்ட 2 மாதங்களில் அப்பகுதி காலி செய்யப்பட்டு, கட்டடப்பணிகள் தொடங்குவதற்காக வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் புத்தூரில் மீன் சந்தை நடத்திய வியாபாரிகளுக்கு மாற்றிடமாக வழங்கப்பட்ட உறையூரில் கட்டடப்பணிகள் இன்னமும் முடிவடையவில்லை. ஆகவே, உறையூரில் கட்டடப்பணிகள் நிறைவடையும் வரை புத்தூர் மீன் சந்தையிலிருந்து வியாபாரிகளை வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி புத்தூரில் வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டரை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு வழக்கினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.