தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழனுக்கு தண்ணீர் தர மாட்டியா? - ஹெச்.ராஜா காட்டம் - press meet at nmadurai

மதுரை: தமிழ்நாட்டில் தமிழனுக்கு தண்ணீர் தர மறுப்பதா என திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

h raja

By

Published : Jun 23, 2019, 6:28 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக என்ற சுயநலவாத அமைப்பு ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீர் மேலாண்மை அழிந்து, நீர் வளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழ்நாட்டின் சரிவு தொடங்கியது. கருணாநிதிதான் அனைத்திற்கும் காரணம் என்றார்.

ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு

மேலும், வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதற்கு, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு தண்ணீர் தர மறுப்பதா எனவும் ஹெச். ராஜா மிக காட்டமாக கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, திமுக என்ற கோர முகம் கொண்ட கட்சியை தமிழ்நாடு மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details