மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்துகிடப்பதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற மேலூர் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அடையாளம் தெரியாத நபரை அடக்கம்செய்த காவலர்! - Melur Police Station Police Siva
மதுரை: இறந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு காவலரே முன்வந்து அடக்கம்செய்த மனிதநேயச் செயலைப் பலரும் பாராட்டினர்.
madurai
பின்னர் அந்த உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராத நிலையில், மேலூர் காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் சிவா என்பவர் தானாக முன்வந்து அவருடைய உடலைப் பெற்று உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தார். இந்தக் காவலரின் மனிதநேயச் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க:கடற்படை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பைக் பேரணி!