தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மதுரையில் மூன்றாவது கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி' - சு. வெங்கடேசன் எம்.பி - S Venkatesan mp

மதுரையில் மூன்றாவதாக கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

third-kendriya-vidyalaya-school
third-kendriya-vidyalaya-school

By

Published : Jul 25, 2020, 5:26 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதுரைக்கு மற்றுமொரு கேந்திரிய வித்யாலயா வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை இடையபட்டியில் அமைந்துள்ள இந்தோ-திபெத்திய எல்லைக் காவலர் படையின் 45ஆவது பட்டாலியன் தலைமையகம் அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட உள்ளது.

அந்தப் புதிய பள்ளியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடமும் கேந்திரிய வித்யாலயா ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளேன். பல ஆண்டுகளுக்கு முன்னரே அனுமதி கிடைக்கப் பெற்றாலும் பள்ளியைத் தொடங்குவதற்கான நடைமுறைகள் காலதாமதப்பட்டே வந்தன. நான் மக்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றவுடன் இப்புதிய பள்ளி தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களைக் கேட்டறிந்தேன்.

அதில் காவலர் படை வளாகத்தில் நிலத்தைப் பள்ளிக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதில் அறிந்தேன். நிலத்தை வழங்க ஒப்புதல் தர வேண்டிய உள்துறை அமைச்சகத்தை அணுகி அந்த நிலத்தை விரைந்து தரும்படி கேட்டுக்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மனிதவள மேம்பாட்டு நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து நேரடியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வலியுறுத்தி வந்தேன்.

தற்போது பள்ளிக்கான நிலம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் புதிய மாணவர் சேர்க்கையைக் காலதாமதப்படுத்தாமல் இவ்வாண்டே தொடங்குவது மக்களுக்குப் பயன்தரும். இன்னும் குறிப்பாக கரோனா பரவலுக்கு மத்தியில் அருகிலேயே மத்திய அரசின் பள்ளி ஒன்று அமைவது மாணவர்களுக்குப் பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் அமையும். எனவே உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கும், கேந்திர வித்தியாலயா ஆணையருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'போட்டிப்போட்டுக் கொண்டு தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகள்' - சு. வெங்கடேசன் எம்பி

ABOUT THE AUTHOR

...view details