தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஆட்டோமேட்டிக் ஆம்புலன்ஸ் சர்வீஸ்’ - கருவியை கண்டுபிடித்து அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

மதுரை: மேலூர் அருகே ஜிபிஎஸ் கருவி மூலம் ஆம்புலன்ஸ் வருவதை முன்கூட்டியே வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் ’ஆட்டோமேட்டிக் ஆம்புலன்ஸ் சர்வீஸ்’ கருவியை கண்டுபிடித்து அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

Unreal Government School Students Discover "Automatic Ambulance Service" Tool!
மதுரை மாணவர்களின் கண்டுபிடிப்பு

By

Published : Aug 30, 2020, 9:04 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வஞ்சிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இரட்டை சகோதர்களான பாலசந்தர், பாலகுமார். இவர்கள் மேலூர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

இவர்கள், விபத்து மற்றும் நோயாளிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் போது அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல்களில் இருந்து சுலபமாகவும், விரைவாகவும் செல்ல கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம், முன்கூட்டியே வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஜிபிஎஸ் மூலம் பிரதிபலிக்கும் வகையில் ஒலிபெருக்கியானது இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஆம்புலன்ஸ் வரும்போதே சிக்னல்களில் எச்சரிக்கை செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மேலூர் - சிவகங்கை சாலையில் சோதனை முயற்சி நடத்தப்பட்டது. இந்த மாணவர்கள் வெல்டிங் பட்டறை உரிமையாளர் செந்தில் உதவியுடன் இந்த முயற்சியை மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details