திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது கர்ப்பிணி ஒருவர் கரோனா தொற்று, கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களோடு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் பூரண நலத்துடன் ஆண் குழந்தை பிறந்தது.
பல சவாலான நோய்களுடன் போராடி அந்த பெண்ணுக்கு சிறுநீரக துறை இரைப்பை, கல்லீரல் துறை மகப்பேறு ஆகியவை பொது மருத்துவ வல்லுநர்களின் கூட்டுமுயற்சியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில், பிளாஸ்மாபெரசிஸ், ஹீமோ டயாலிசிஸ் போன்ற முறைகளும் கையாளப்பட்டன. தற்போது அந்த கர்ப்பிணி அனைத்து வகை நோய்த் தொற்றிலிருந்தும் பூரண குணமடைந்தார்.