மதுரை பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மோகன் இன்று (மார்ச் 10)காலை இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து பெரியார் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரியாபட்டியிலிருந்து பெரியார் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.