தமிழ்நாடு

tamil nadu

தேவர் ஜெயந்தி விழாவின் போது அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு!

By

Published : Oct 30, 2021, 7:37 PM IST

தேவர் ஜெயந்தி விழாவை நடைபெற்று கொண்டிருந்த போது, இளைஞர்கள் சிலர் அரசு பேருந்தின் மேல் ஏறி நடனமாடி, கல் வீசி கண்ணாடியை உடைத்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடாவடி செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் தொடர்பான காணொலி
அடாவடி செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் தொடர்பான காணொலி

மதுரை: தமிழ்நாடு முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது குருபூஜை விழா இன்று (அக்.30) கொண்டாடப்பட்டது. இதனையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் திரு உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பொதுமக்களும் அமைதியான முறையில் பால்குடம் எடுத்து தேவர் ஜெயந்தியை கொண்டாடினர். மேலும் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரியாதை செலுத்த வந்திருந்தனர்.

கண்ணாடி உடைப்பால் காயம்

அப்போது மாட்டுத்தாவணியிலிருந்து பயணிகளை ஏற்றிய அரசு பேருந்து ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. திடீரென அனைத்து இளைஞர்களும் அரசு பேருந்தின் மீது ஏறி நடனம் ஆடத் தொடங்கினர்.

அடாவடி செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் தொடர்பான காணொலி

பின்னர் பேருந்தின் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர். இதில் அரசு பேருந்து ஓட்டுநர், பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இளைஞர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனை அறிந்த பிற ஓட்டுநர்களும், அரசு பேருந்துகளை இயக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தபோதும், அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி - முதலமைச்சர் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details