தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை - கோகுல்ராஜ் ஆணவக்கொலை

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜூக்கு, மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு, யுவராஜ், Yuvaraj
கோகுல்ராஜ் கொலை வழக்கு

By

Published : Mar 8, 2022, 3:54 PM IST

Updated : Mar 8, 2022, 6:50 PM IST

மதுரை: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 11 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அருள்செந்தில், சங்கர், செல்வக்குமார், சுரேஷ், தங்கதுரை ஆகியோர் வழக்கிலிருந்து விடுவித்திருந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 11 பேரில் ஜோதிமணி உயரிழந்தவிட்ட நிலையில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ், அருண் (யுவராஜின் கார் ஓட்டுநர்), ரஞ்சித், செல்வராஜ், சதீஷ்குமார், ஸ்ரீதர் (எ) ரகு, சந்திரசேகரன், சிவக்குமார் (எ) குமார், பிரபு, கிரிதர் ஆகியோருக்கான தண்டனை விவரங்களை சிறப்பு நீதிபதி சம்பத்குமார் இன்று (மார்ச் 8) நண்பகல் அறிவித்தார்.

அதன்படி, வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இரண்டாம் குற்றாவளியான அவரின் ஓட்டுநர் அருண்,குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டள்ளது. பிரபு, கிரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டு கடுங்காவலும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை...

Last Updated : Mar 8, 2022, 6:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details