சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை மதுரை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 14 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்! - கோகுல்ராஜ் கொலை வழக்கு
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 14 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்குத் தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் மதுரை மத்திய சிறையில் உள்ள அருண், சிவக்குமார் உள்ளிட்ட 14 பேர் வழக்கு விசாரணைக்காக மதுரையில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகினர். அப்போது இந்த கொலை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த ஆய்வாளர், சிபிசிஐடி ஆய்வாளர் பிருந்தா ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.