தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்’ - அமைச்சர் செல்லூர் ராஜூ! - கரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்

மதுரை: என்னைப் போலவே நீங்கள் எல்லோரும் கரோனா தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

get-used-to-living-with-corona-minister-sellur-raju
get-used-to-living-with-corona-minister-sellur-raju

By

Published : Aug 28, 2020, 3:50 PM IST

மதுரை மாவட்டத்திலுள்ள திருமலை நாயக்கர் அரண்மனையைச் சுற்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஆகஸ்ட் 28) அதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 900 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வைகை ஆற்றின் கரையோரங்களில் சாலைகள் அமைத்தல், மதுரை சந்திப்பிலிருந்து திருமலை நாயக்கர் மஹால் வரை பாரம்பரிய விளக்குகள் அமைத்தல் என பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதேபோன்று திருமலை நாயக்கர் அரண்மனையைச் சுற்றி பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் என்று தெரிவித்தார்.

‘கரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்’- அமைச்சர் செல்லூர் ராஜூ!

தொடர்ந்து பேசிய அமைச்சர், இனி வருகின்ற காலங்களில் எல்லோரும் கரோனாவோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். அந்த அடிப்படையில்தான், நான் முகக் கவசம் கூட அணியவில்லை. காரணம் நான் கரோனாவோடு வாழப் பழகிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். இனி வருங்காலங்களில் கரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என அமைச்சர் கூறியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க:பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details