மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூலபாண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று (அக்.,19) திருப்பாலை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறில் மதுபோதையில் இருந்த மணிகண்டனை உடன் இருந்த நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். தீயில் கருகிய நிலையில் வலி பொறுக்காமல் கதறிய மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
கிட்டத்தட்ட 90 விழுக்காடு தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று (அக்.,20) அதிகாலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.