கரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகளின் இயல்பு நிலை வலுவிழந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, மனித நேயத்தோடு சேவை செய்கிற தன்னார்வலர்களின் செயல் வெளிச்சம் கண்டுள்ளது.
அந்த வகையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த மெக்கானிக் சேகர், தன்னுடைய மகத்தான சேவையின் காரணமாக பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். இவர், சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதார தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களின் இருசக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கி தரும் பணியை தனது சமூக கடமையாக செய்து வருகிறார்.
மேலும், சமூகப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நபர்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மெக்கானிக் சேகர் இந்த சேவையை புரிந்து வருகிறார். இதன் காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட பலரின் பாராட்டை பெற்றுள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு இலவச ரிப்பேர் - மெக்கானிக் சேகரின் மகத்தான சேவை - மதுரையைச் சேர்ந்த மெக்கானிக் சேகரின் மகத்தான சேவை
மதுரை: தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக இருசக்கர வாகனங்களைப் பழுது பார்த்து தரும் மதுரையைச் சேர்ந்த மெக்கானிக் சேகருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
மெக்கானிக் சேகர்