புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவுதீன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அரசு, அரசு சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 9.12 லட்சம் இலவச மடிக்கணினி வாங்கப்பட்டது.
இலவச மடிக்கணினியைப் பயன்படுத்தி அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகின்றனர். இந்நிலையில், 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் 2018-19, 2019-20, 2020-21ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உத்தரவிடப்பட்டது.