மதுரை:நாகர்கோவிலைச் சேர்ந்த சிறுமி ஃப்ரீ பயர் விளையாட்டில் ஏற்பட்ட பழக்கத்தால் நண்பர்களுடன் மாயமானார். அவரை மீட்டுத்தரக்கோரி அவரது தாயார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், கரோனா ஊரடங்கு காலம் இளம் தலைமுறைக்கு சோதனைக் காலகட்டமாகவே அமைந்தது. ஆன்லைன் வகுப்பு நடைபெற்ற போது இளம் தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கினர். தனி உலகில் வாழும் இவர்கள் நிஜவாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இந்த விளையாட்டு வந்து கொண்டேதான் இருக்கிறது. இதனை முழுமையாக தடை செய்வது இயலாத காரியமாகவே உள்ளது.