மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தேவர் ரயில்வே மேம்பாலத்தில் கீழ் கஞ்சா விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ரயில்வே பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை: நான்கு பேர் கைது - ரயில்வே மேம்பாலம்
மதுரை: ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்ற நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
arrest
அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம், 21 கிலோ கஞ்சா 700 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின், நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.