மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை விரிவாக்கக் கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் கரோனா சிறப்புச் சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வரை 117 பேர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று புதிதாக நான்கு பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் பெண்கள், இருவர் ஆண்கள் எனத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தற்போது வரை மாவட்டத்தில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், 73 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 46 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட அல்லது பரிசோதனைக்கு வருகின்ற நோயாளிகளைத் தவிர, அதிக நபர்கள் வருவதைத் தடுக்க அந்த மருத்துவமனையைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகச் சுகாதாரத் துறையும் மதுரை மாநகராட்சியும் அறிவித்துள்ளன.
மதுரையில் இன்றும் புதிதாக 4 பேருக்கு கரோனா - Madurai district news
மதுரை: இன்று புதிதாக நான்கு நபர்களுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது.
madurai
இதனால், அப்பகுதி முழுவதும் காவல் துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுக்களின் பணிகள் என்ன?