முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன், கடந்த சில நாள்கள் முன்பு மதுரைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பொன் ராதாகிருஷ்ணன் - former union minister pon radhakrishnan recovered from corona
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கரோனா சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார்.
பொன் ராதாகிருஷ்ணன்பொன் ராதாகிருஷ்ணன்
தொடர்ந்து அவருக்கு கரோனாவின் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (மே.13) சிகிச்சை முடிந்து பொன் ராதாகிருஷ்ணன் பூரண நலத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.