மதுரை:அவனியாபுரம் அருகே அயன்பாப்பாக்குடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதால், வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் நீரில் இருந்து ரசாயன நுரை பொங்கி வருகிறது. மலையாக குவிந்துள்ள நுரையால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், கழிவு நீரால் உருவான நுரையின் முன்பு மக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் அருகே அயன்பாப்பாக்குடி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அவனியாபுரம் அருகே அயன்பாப்பாகுடி, வெள்ளக்கல் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்கின்றன.
தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் மழை நீரோடு கலந்து அயன்பாப்பாக்குடி கண்மாயின் பாசனக் கால்வாயில் கலக்கிறது. இவ்வாறு பல்வேறு பகுதியிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீர் கண்மாயில் கலப்பதால், அயன் பாப்பாக்குடி கண்மாயிலிருந்து, வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க:சார்பு ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய குற்றவாளி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல் ஆய்வாளர் - மதுரையில் பரபரப்பு!