தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை காரணமாக மதுரையில் பூக்கள் விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை - மதுரையில் பூக்கள் விற்பனை மந்தம்

மதுரை: மாவட்டத்தில் நேற்றிலிருந்து தொடர் மழை காரணமாக மதுரையில் மலர் சந்தையில் அனைத்து ரக பூக்களின் விற்பனை மந்தமாக உள்ளது என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Flower prices shoot down
Flower prices shoot down

By

Published : Nov 6, 2020, 2:54 PM IST

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ளது மலர் வணிக வளாகம். இங்குள்ள பூ சந்தைக்கு உசிலம்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், திருப்புவனம், காரியாபட்டி, சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தென் மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று(நவ-5) இரவிலிருந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மதுரை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை மந்தமாகக் காணப்படுகிறது. பொதுமக்கள் வரத்துக் குறைவு காரணமாகப் பூக்கள் தேங்கிக் கிடப்பதாக அங்குள்ள வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பூக்கடை ராமச்சந்திரன் கூறுகையில், 'தற்போது பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால் பொதுவாக மலர்களின் விற்பனை சிறப்பாக இருக்கும். ஆனால், மழை காரணமாக மந்தமாக உள்ளது. இன்றைய விலை நிலவரத்தைப் பொறுத்தவரை மல்லிகை ரூ.250லிருந்து ரூ.200, செவ்வந்தி ரூ.50, அரளி ரூ.50, முல்லை ரூ.200, பிச்சிப்பூ ரூ.150, சம்பங்கி ரூ.40, துளசி ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுவதோடு, பிற பூக்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details