மதுரை:மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், எந்நேரமும் அணை நிரம்பி வழியும் என்பதால் மதுரை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைகையில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், மதுரை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைகையில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
மதுரை நகரில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர் காரணமாக பாலங்கள் அனைத்தும் மூழ்கியுள்ளன. இதனையடுத்து அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு மாற்று வழிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:ஓராண்டிற்குள் வைகை எழில்மிகு ஆறாக மாறும் - அமைச்சர் செல்லூர் ராஜு