மதுரை காவல்துறையில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன் - தமிழ்ச்செல்வி தம்பதியினர் மகன் ஸ்ரீமன். இவர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். துப்பாக்கிச் சுடும் வீரரான ஸ்ரீமன் டெல்லியில் 28 ஆம் தேதி தேசிய அளவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு உட்பட்ட துப்பாக்கி சூடும் போட்டியில் பங்கேற்று பல தங்கப்பதக்கம் வென்று உள்ளார்.
துப்பாக்கிச் சூடு போட்டி: பதக்கம் வென்ற மதுரைக்காரன் - SHOOTER_COMPETITION
மதுரை: டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீமன் என்பவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இவரது திறமையை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீமன்
தமிழ்நாட்டில் இருந்து சென்ற 16 வீரர்களில் ஸ்ரீமனும் ஒருவர், மண்டல வாரியாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் அடுத்த மாதம் ஹரியானாவில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு ஸ்ரீமன் தேர்வாகியுள்ளார். துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வம் கொண்ட ஸ்ரீமன் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.
தற்போது தேசிய அளவில் வெற்றிபெற்ற ஸ்ரீமனுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.