தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனாட்சி கோயில் அருகே துணிக்கடையில் தீ விபத்து - ஜவுளிக்கடையில் தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள துணிக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

fire-at-clothing-store
fire-at-clothing-store

By

Published : May 29, 2020, 8:56 AM IST

பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள தனியார் துணிக்கடையில் நேற்றிரவு 8 மணி அளவில் திடீரெனத் தீப்பிடித்தது.

பின்னர் மளமளவென தீப்பற்றி எரியவே, தல்லாகுளம், அனுப்பானடி, மீனாட்சி அம்மன் கோயிலின் அவசரகால தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

அதில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள், அலுவலக உபகரணங்கள் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் காவல் துறையினர் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:ஈரோடு சிப்காட் ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details