மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் என்ற பகுதியில் ஆதிதிராவிடர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
எரிந்து கிடக்கும் இருசக்கர வாகனங்கள் இந்நிலையில், இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பின் முன்பக்கம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கின.
இதனைக் கண்ட வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
தீப்பற்றி எரிந்துகிடக்கும் இருசக்கர வாகனங்கள்! இந்த சம்பவம் குறித்து திடீர் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.