கரோனா தாக்குதலால் இந்தியாவில் தற்போது வரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா அறிகுறியுடன் மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை தங்க வைப்பதற்கான முகாமினை மாவட்ட அலுவலர்கள் சின்ன உடைப்பு என்ற கிராமத்தில் உள்ள அரசு கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் ஏற்படுத்தியுள்ளனர். தற்போது 120 நோயாளிகள் வரையில் தங்க வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.