மதுரை: தெற்கு மத்திய ரயில்வே, செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு கட்டண ரயில்களின் சேவை நீட்டிப்பு குறித்து கீழ்கண்டவாறு அறிவித்துள்ளது. புதன்கிழமைகளில் 21.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் 22.30 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும் ரயில் எண். 07695 செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரயில், மார்ச் 01, 2023 முதல் ஜூன் 28, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ( 01, 08, 15, 22, 29 மார்ச், 05, 12, 19, 26 ஏப்ரல், 03, 10, 17, 24, 31 மே & 07, 14, 21, 28 ஜூன் 2023 (18 சேவைகள்)
செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
செகந்திராபாத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் 09.50 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும் ரயில் எண். 07696 ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் மார்ச் 03, 2023 முதல் ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (03, 10, 17, 24, 31 மார்ச், 07, 14, 21, 28 ஏப்ரல், 05, 12, 19, 26 மே & 02, 09, 16, 23, 30 ஜூன், 2023 (18 சேவைகள்). ரயிலின் அமைப்பு, நிறுத்தங்கள் மற்றும் நேரம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. மேற்கூறிய வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சென்னை சென்ட்ரல் அமைதியான ரயில் நிலையமாக மாறியது - தென்னக ரயில்வே