தமிழ்நாடு

tamil nadu

வாக்குகளை முழுமையாக எண்ணாமல் வெற்றி அறிவிப்பு: அமமுகவினர் குற்றச்சாட்டு

By

Published : Jan 2, 2020, 4:14 PM IST

மதுரை: செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பானா மூப்பன்பட்டி ஒன்றாவது வார்டில் அனைத்து பகுதி வாக்குகளையும் எண்ணாமலேயே வெற்றி என அறிவிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ammk party protest
ammk party protest

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பானா மூப்பன்பட்டி ஒன்றிய ஒன்றாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை கருமாத்தூர் அருளானந்தர் கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

வாக்குவாதத்தில் ஈடுபடும் அமமுகவினர்

இந்த வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட தனபாக்கியம் 142 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த அமமுகவைச் சேர்ந்த விஜயலட்சுமி, இந்த வார்டில் பதிவான அரசமரத்தின் வாக்குகள் எண்ணப்படவில்லை என தேர்தல் அலுவலரிடம் குற்றம்சாட்டினார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட தேர்தல் அலுவலர்கள் அனைத்து வாக்குப் பெட்டிகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை ஆதாரப்பூர்வமாக அவர்களிடம் உறுதி செய்ததையடுத்து கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அருளானந்தர் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள தேர்தல் அலுவலக அறை எண் 533 முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காவல் துறையினர் உடனடியாக வந்து பிரச்னை செய்தவர்களை அப்புறப்படுத்தினர். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான பானா மூப்பன்பட்டி ஒன்றாவது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட தனபாக்கியம் 142 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மயில்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயி கைது

ABOUT THE AUTHOR

...view details