நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் நவின் சாவ்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மின்னணு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பிய நிலையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டு அதில் இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது என்பது நிரூபணமாகியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது- நவீன் சாவ்லா - உச்சநீதிமன்றம்
மதுரை: மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது என்பதை உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் நிரூபித்துள்ளோம் என்று முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறினார்.
பல முறை மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது என்பதை உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் நிரூபித்துள்ளோம். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள VVPAT இயந்திரத்தில் 7 நொடிகள் வரிசை எண், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னமானது திரையில் திரையிடப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர், வாக்குப்பதிவு இயந்திரத்தை முறைகேடு செய்யலாம் என்று வெளியான ஆய்வு குறித்து பேசுகையில் லண்டனில் ஆய்வு செய்யப்பட்ட EVM வாக்கு இயந்திரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு இயந்திரம் அல்ல. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க இயலாது, தான் ஓய்வுபெற்றுவிட்டேன் என்று கூறினார்.