மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தனது வீட்டில் மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 18 பவுன் நகையை பாதுகாப்பு கருதி தினமும் பழைய பையில் வைத்து தலையணையின் கீழ் வைத்து தூங்குவது வழக்கம். அதே போல் நேற்றும் தூங்கியுள்ளார். அப்போது காலை வீட்டை சுத்தம் செய்யும்போது குப்பை என கருதி அந்த பையை குப்பையில் தூக்கி வீசியுள்ளார். சிறிது நேரம் கழித்து ஞாபகம் வந்தவுடன் மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர் முருகனிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.
ஞாபக மறதியில் குப்பைக்கு போனது 18 பவுன் நகை; மாநகராட்சி ஊழியரிடம் விசாரணை! - sovereign of gold
மதுரை: மதுரையில் ஞாபக மறதியில் 18 பவுன் நகையை குப்பையில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 பவுன் நகையை குப்பையில் வீசிய சம்பவம்
அதனைத் தொடர்ந்து முத்துக்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் மாநகராட்சி துப்புரவு பணியாளர் முருகனை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஞாபக மறதியில் 18 பவுன் நகையை குப்பையில் வீசிய சம்பவம் அப்புகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.