மதுரை:திருநெல்வேலி திருநகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ''திருநெல்வேலி திருநகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். விசாரணை செய்த குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் அதிகாரிகள் அந்தத் திட்டத்தில் என்னை தேர்வு செய்தனர்.
வீடு கட்டுவதற்கான ஒப்பந்தத்தை செயற்பொறியாளர்களின் உறவினர் ஒருவர் மூலம் வீடு கட்டி, ஒப்பந்தம் செய்ய வைத்தனர். இந்தத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு நான்கு தவணையாக ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள். வீட்டு வேலைகள் ஆரம்பித்து இரண்டு தவணையாக ஒரு லட்சம் பெற்றேன்.
இதனிடையே வீடு கட்டுவதில் பல்வேறு முறைகேடுகள் ஒப்பந்ததாரர் செய்தார். இதனை உதவி செயற்பொறியாளர்களிடம் கூறியும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் மீதித் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்'' என கடந்த 2019ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணை செய்யப்பட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் அனைவருக்கும் வீடு என்ற ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் மனுதாரர் விண்ணப்பித்து, அதில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு லட்சம் ரூபாயும் பெற்றுள்ள நிலையில், நெல்லை மாவட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளார்.