மதுரை மாவட்டம் முடுவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலப்பெருமாள் மேஸ்திரி தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது தெருவில் இருந்த டெலிபோன் வயர் செல்லும் கம்பத்தில் கை வைத்துள்ளார்.
அப்போது அருகில் சென்ற மின்சார கம்பத்தில் இருந்து அறுந்த மின் வயர் டெலிபோன் வயர் கோபுரத்தில் விழுந்துள்ளது. இதை அறியாத கருணாகரன் டெலிபோன் கம்பத்தில் கை வைத்ததால் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.