மதுரை மாவட்டம், தொடக்க பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பெரிய கருப்பன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”மதுரை ஆவின் நிறுவனத்திலுள்ள 17 இயக்குநர்கள் பதவிக்கான தேர்தல் கடந்தாண்டு நடந்தது.
’ஆவின் இயக்குநர்களுக்கான தேர்தலை நடத்தக் கூடாது’ - நீதிமன்றம் உத்தரவு - நீதிமன்றம்
மதுரை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஆவின் இயக்குநர்களுக்கான தேர்தல் நடத்தக் கூடாது என்றும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகே முறைப்படி நடத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதில் அதிமுகவைச் சேர்ந்த 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 11 பேர் இயக்குநர்களாக போட்டியின்றி தேர்வானதை ரத்து செய்தது. முறையாக அறிவிப்பு வெளியிட்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
இதன்படி, 11 இயக்குநர்களை தேர்வு செய்தவற்கான தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து, மே 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தற்போது கரோனா இரண்டாம் அலை பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளது.
ஆனால், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்டோர் வந்து வாக்களிக்க வேண்டும். இதனால், பலதரப்பிலும் பாதிப்பு ஏற்படும். எனவே, மதுரை ஆவின் நிறுவனத்தில் 11 இயக்குநர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகளை தொடர தடை விதிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது. அரசு தரப்பில் ஊரடங்கு நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டப் பிறகே தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு முறையாக தேர்தலை நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.