தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரம்! - thiruparamkuttram

மதுரை: திருப்புரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரம்

By

Published : May 14, 2019, 10:39 AM IST

மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிக்கும் பணிகள் தொடங்கியது.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேர்தல் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரம்
இந்நிலையில், திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் பாதுகாப்பு, தேர்தல் கண்காணிப்பு பணிக்காக வட்டாட்சியர் அலுவலகத்தின் உள் வளாகத்திலும், வெளி வளாகத்திலும் கண்காணிப்புக் கேமரா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

ABOUT THE AUTHOR

...view details