மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மக்களவைத் தொகுதிகளுக்கான ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் தாசில்தார் சம்பூர்ணம் உட்பட நான்கு பேர் அனுமதியின்றி நுழைந்ததாக பிரச்சனை வெடித்தது. இதையடுத்து அந்த நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவகல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளார்.