தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாக்கடையை சுத்தம் செய்யும் மூதாட்டி; காரணம் என்ன? - cleaning the sewer every day

மதுரை: தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வயதான மூதாட்டி ஒருவர் சாக்கடையை தினமும் சுத்தம் செய்து வருகிறார்.

மூதாட்டி

By

Published : Sep 13, 2019, 7:12 AM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 17 வது வார்டில் உள்ள முக்கிய வீதியான நாடார் புதுத்தெருவில் அதிகளவில் நகைக்கடைகள், தங்க நகை மெருகேற்றும் கடைகள் , வணிக வளாகங்கள் இயங்கிவருகிறது. இந்நிலையில், வண்டிப்பேட்டை, நாடார் புது தெரு, விகேஎஸ் தெரு இணையும் இடத்தில் சாக்கடை வாய்க்காலில் சாக்கடைக் கழிவுநீர் செல்கிறது. இந்த சாக்கடைக் கழிவுநீரில் மூதாட்டி ஒருவர் தினமும் கிளறிவிட்டு, அதிலிருக்கும் நீரில் தங்கம், வெள்ளி போன்றவைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் சுத்தம் செய்து வருகிறார் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாக்கடையை சுத்தம் செய்யும் மூதாட்டி; காரணம் என்ன?

இப்பகுதியில், நகைக் கடைகள் அதிகளவில் இருப்பதால் சிறு அளவில் தங்கம் கிடைப்பதால் அதை விற்று தனது வாழ்வாதார தேவைகளை பாா்த்து வருவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

ABOUT THE AUTHOR

...view details