தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்திர கிரகணம்: மீனாட்சி அம்மன் கோயில் அடைப்பு - மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் காரணமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நடை சாத்தப்பட உள்ளதாக கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

lunar Eclipse  meenakshi temple  madurai meenakshi temple  lunar Eclipse meenakshi temple close  madurai news  madurai latest news  சந்திர கிரகணம்  மீனாட்சி அம்மன் கோயில்  மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  மதுரை செய்திகள்
சந்திர கிரகணம்

By

Published : Nov 4, 2022, 6:58 AM IST

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் துணை கோயில்களில், நவம்பர் 8ஆம் தேதி அன்று சந்திர கிரகணம் பிற்பகல் 02.39 மணிக்கு ஆரம்பமாகி மாலை 06.19 மணிக்கு முடிவடைவதால், காலசந்தியில் சாயரட்சை பூஜையும் நடைபெறும்.

நவம்பர் 8ஆம் தேதி அன்று காலை 07.00 மணிக்கு மேல் அன்னாபிஷேகம் நடைபெற்று, காலை 09.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை அம்மன்-சுவாமி மூலஸ்தானத்தில் பலகனி கதவுகள்அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் பக்தர்கள், பொது மக்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை.

அதே நாளில் மத்திம காலத்தில் மாலை 04.30 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்படும். அதன் பின் அருள்மிகு சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும். இரவு 07.00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும். அதன் பின் இரவு 07.30 மணிக்கு இரவு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக நவம்பர் 7ஆம் தேதி மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெறும்.

இதேபோன்று இத்திருக்கோயிலின் நிர்வாகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் இதே நேரத்தில் நடை சாத்தப்பட்டு, நடை திறக்கப்பட்டும் பூஜைகள் நடைபெறும் என மீனாட்சி கோயிலின் துணை ஆணையர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குமரி to ஜோத்பூர்: விமானத்தில் சென்ற சினேரியஸ் கழுகு - வழிதவறிய கழுகிற்கு அரசு செய்த பெரும் உதவி!

ABOUT THE AUTHOR

...view details